தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே பாலம் அமைக்க முயற்சி

தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம், அது நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க மாவட்டமாக இராமநாதபுரம் திகழும் என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து இராமநாதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு சுபிட்சமான வாழ்வு ஏற்பட நடவடிக்கை எடுப்போம். பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இலங்கை சிறையில் இருந்த 1,500 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares