பிரதான செய்திகள்

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தேர்தல் போட்டி யார் வெற்றி யார் தோல்வி என்ற நிலை

wpengine

வட.மாகாண 1756 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – ஜெகதீஸ்வரன் எம்.பி.

Maash

நாவலடி இராணுவ முகாமை அகற்றக்கோரி முஸ்லிம்கள் போராட்டம்

wpengine