பிரதான செய்திகள்

தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள்! சங்கம் கண்டனம்

மருத்துவக் கல்வி சம்பந்தமான குறைந்தபட்ச கல்வித் தகுதி தரம் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத காரணத்தினால், தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அரச வைத்திய அதிகாரங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அரச மருத்துவக் கல்லூரி அல்லாத தேசிய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற 83 பேருக்கு இலங்கை மருத்துவச் சபையின் அனுமதியுடன் நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் இவர்களில் 76 பேர் தகுதியை பூர்த்தி செய்யாதவர்கள் எனவும் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே கூறியுள்ளார்.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த நபர்களில் 30 பேர் உயர் தரப்பரீட்சையை எழுதினார்களா இல்லையா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் 18 பேர் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்கள் என்பதுடன் உயிரியல் விஞ்ஞானப்பாடத்தை கற்கவில்லை.


சுகாதார அமைச்சின் எழுதுவிளைஞர் பதவிக்கு கூட உயர் தரத்தில் சித்தியடைந்திருப்பது அவசியம் என்ற நிலையில், உயர் தரத்தில் கூட சித்தியடையாதவர்கள் மருத்துவத்துறையில் மருத்துவர்களாக நியமிக்கப்பட்டால், நாட்டின் மருத்துவத்துறை உலகத்திற்கு மத்தியில் வரவேற்பை இழப்பதை தவிர்க்க முடியாது எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

Editor

முஸ்லீம் காங்கிரஸை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொறுப்பேற்றதன் பின்னர் முஸ்லீம் மக்களிற்கு செய்தது என்ன?

wpengine