தகவல் அறியும் சட்டத்தை கொச்சைப்படுத்தும் பிரதேச நிர்பாசன பொறியளாளர் -சிலாவத்துறை

Muhuseen Raisudeen
முசலிப் பிரதேசத்தில் குளங்கள், கால்வாய்களின் அபிவிருத்திக்கு வரும் கோடிக்கணக்கான நிதி மூலங்கள் மற்றும் கொந்தராத்து வேலைகள் தொடர்பாக பரவலான விமர்சனங்கள் நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அதனால் அதுகுறித்த தெளிவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வேப்பங்குளத்தில் அமைந்துள்ள பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலயத்துடன் தகவலறியும் சட்டத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தினேன்.
எனினும் குறித்த நிதி விபரத்தைப் பெற முடிந்த போதும் கொந்தராத்து வேலைகள் கொடுக்கப்பட்ட விபரத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இறுதியாக தமிழ் மொழியில் கோரப்பட்ட தகவலுக்கு சிங்கள மொழியில் பதிலனுப்பப்பட்டு தகவல் தராமல் இழுத்தடிக்கப்பட்டது.
இதன்மூலம் RTI – 1, RTI – 10 ஆகிய அரச படிவங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டன. தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்து குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும் இந்தக் கட்டத்தில் அதனை விட விரிவான – ஆழமான மாற்று வழிமுறையைக் கையாள எண்ணியுள்ளேன்.
முசலி சமூகத்தின் தெளிவுக்கும் தேவையானவர்களின் மேலதிக நடவடிக்கைகளுக்குமாக கிடைக்கப்பெற்ற பதில்களை பகிர்ந்து கொள்கிறேன்.