பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கை வவுனியாவில்

வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா விமானப்படை மற்றும் பொலிஸாரின் ஏற்பாட்டில் குறித்த செயற்பாடு இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறி வெளியில் பயணிப்போர் மற்றும் வீதிகளில் அநாவசியமான முறையில் நடமாடுபவர்களை கண்காணிக்கும் வகையில் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தோணிக்கல், தேக்கவத்தை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

Related posts

ரஷ்யா,அமெரிக்கா போட்டி! 755 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம்

wpengine

வட்அப்,பேஸ்புக் தடை நள்ளிரவுடன் நீக்கம்

wpengine

மன்னார், சிலாவத்துறை, சவுத்பார் பகுதியில் கைதான மீனவர்கள்

wpengine