டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)

கொழும்பு,வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர் டொக்டர் சாபியின் தலைமையில் 100க்கு மேற்பட்ட இளைஞர்களுடன் இன்று (28) சுத்தம் செய்யும் பணியொன்று இடம்பெற்றது.
மேலும் டொக்டர் சாபியின் சொந்த நிதியிலிருந்து MFCD நிறுவனத்திற்கு சுமார் இரண்டு லச்சம் மேற்பட்ட பெறுமதியான நிவாரணப்பணிக்கு அத்தியவசியமான பொருற்களை அன்பளிப்பு செய்தனர்.