டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் நான்கு நாட்கள் டெங்கு ஒமிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் நுளம்பு உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் வழங்கப்படவிருப்பதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தேரிவிக்கையில்,

டெங்கு ஒழிப்பு வாரத்தை ஒட்டி மன்னார் அரச அதிபரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பிரதி பிராந்திய சுகாதார ஒருங்கிணைப்பாளர் எச்.றோய், பிரதி வைத்திய சுகாதர அதிகாரி சமரசிறி மற்றும் கடற்படையினர்,பொலிசார், இராணுவம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்கள் உள்ளிட்ட சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

இவர்கள் வீடுகளுக்கு வரும்போது மக்களின் ஒத்துமைப்பு அவசியமாக உள்ளது. இதற்கமைவாக நேற்று முன் தினம் முதல் டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ் தேலைத்திட்டம் தொடர்ச்சியாக நான்குநாட்கள் நடைபெறவுள்ளது.

இதன்படி செவ்வாய்கிழமை (29) பனங்கட்டுகொட்டு, எமில்நகர், சின்னக்கடை, பெற்றா,பெரியகடை பகுதியிலும் அதேபோன்று நேற்று புதன்கிழமை(30) மூர்வீதி, உப்புக்குளம், சாவற்கட்டு ஆகிய கிராமங்களிலும் இன்று (31) எருக்கலம் பிட்டியிலும் நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 1ம் திகதி பேசாலையிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற டெங்கு தடுப்பு நடவடிக்கையின்போது 93 நபர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த அடையாளம் காணப்பட்ட இடங்களை சுத்தபடுத்த மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்று நாட்களுக்குள் இவ்விடங்களை சுத்தபடுத்தி டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றோம் எனினும் தவறும் பட்சத்தில் குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares