பிரதான செய்திகள்

டெங்கு ஒழிப்பு! தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமையாக நிலை

தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது. தர்ஹா நகரில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர். தர்ஹா நகருக்குச் சென்ற டெங்கு ஒழிப்பு பிரிவினர், டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை விசிறியுள்ளனர்.

அதன்போது, அவர்கள் விசிறிய புகை அங்கிருந்த கடையிலுள்ள பொருட்களின் மீது பட்டதாகக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். பின்னர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் புகை விசிறிய தொழிலாளி ஆகியோரை கடைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கடைக்குள் வைத்து பூட்டப்பட்ட இருவரையும் மீட்டனர். அதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. அதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

பாகிஸ்தான் மீதான டம்பின் புதிய பாசம்! கட்டிபிடி வைத்தியம் செய்யுங்கள்

wpengine

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம்! சிறுமியின் நிர்வாண படம்

wpengine