பிரதான செய்திகள்

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்! -மஹிந்த ராஜபக்ஷ-

டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ டிசம்பரில் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜிதவை புதிய பிரதமராக நியமிப்பதற்கு கலந்துரையாடல்

wpengine

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

wpengine

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாகள்- தனது அறிக்கையிலிருந்து பின்வாங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

Maash