டிக் டொக் மோதல்! 17 வயதான அப்துல் லத்தீப் கத்தியால் குத்தி கொலை

கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பகுதியில், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான  இளைஞனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அறுவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா, இன்று (05) உத்தரவிட்டார்.

மேலும் ஆறு சிறுவர்களையும் சிறைச்சாலை பாதுகாப்பில் மாகொல சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் 12 மற்றும் 16 வயதுடையவர்கள் என கிரான்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 17 வயதான அப்துல் லத்தீப் என்ற இளைஞன், டிக் டொக் சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதலால், படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares