டக்ளஸ்சுக்கு தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்’

கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும், சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமான் மூலமாக இன்றும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு அவரின் அவரின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,


1994ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிநிதியாக முதற் தடவையாக தான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த போது அமரர் ஆறுமுகம் தொண்மானும், நாடாளுமன்ற பிரவேசத்தினை மேற்கொண்டார்.


அன்று முதல் இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில் கட்சியின் தலைமைப் பதவியிலும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து மலையக மக்களுக்கு மாத்திரமின்றி இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும்.


மேலும், ‘கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன்
உரையாடியபோது ‘உங்களுக்குத் தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்’ என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

comments

Shares