ஞாயிறு தாக்குதல்! தனது பெயரை வெளியிட வேண்டாம் மௌலவி சாட்சியம்

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பொறுப்பற்ற முடிவு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாக செயல்பட அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய மௌலவி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.


தனது பெயரை வெளியிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ள மௌலவி இதனை தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி நாட்டிற்குள் இயங்கும் இரண்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை மட்டுமே தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.


எனினும், நாட்டிற்குள் மேலும் ஏழு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் இருந்தன எனவும், அவை தற்போது வெவ்வேறு முறையில் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அந்த ஏழு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் தற்போது போலி பெயர்களுடன் சுதந்திரமாக இயங்கி வருகின்றன.


அந்தக் குழுக்கள் வெவ்வேறு முறைகள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை பரப்புவதாகவும்” அவர் மேலும் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares