பிரதான செய்திகள்

ஞானசார தேரர் விடுதலை விடயத்தில் புதிய மாற்றம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பே இவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாதகால கடூழிய சிறை தண்டனை எதிர்த்து ஞானசார தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை! காரணம் பெறும்பான்மை இளைஞர்கள்

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரச்சாரங்கள் -மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்க

wpengine

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine