பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் காமினி ஜெயவிக்ரம

பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி நாடு திரும்பியதும் முன்வைக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் கருத்துரைத்துள்ள அவர், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ராமாண்ய பீடம், தலதா மாளிகையின் நிலமே, கோட்டே ஶ்ரீகல்யாணி கமகீ தர்ம மகா சங்க, அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர் ஆகியோருக்கு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கோரிக்கை தொடர்பில் எந்த அதிகாரிகளுடனும் பேச்சு நடத்த அவசியம் இல்லை.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசவுள்ளதாக காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அனுரவின் 3 நாடுகளின் பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாய் சாத்தியமா ?

Maash

மந்தகதியில் நடைபெறும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்! கவனம் செலுத்துமா மாவட்ட செயலகம்

wpengine

எதிர்வரும் வாரத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

wpengine