பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் ஞான சார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம் என வலிறுத்தி மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சரை இன்று நேரில் சந்தித்த இந்த மனுவை கையளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது
இந்த நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்புக்காக ஞானசார தேரரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கேட்டக வேண்டும் மெதகம தம்மானந்த தேரர்

wpengine

அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக்கோரி 38 சிவில் அமைப்புகள்

wpengine

தாஜு­தீனின் படு­கொலை! ஹம்­பாந்­தோட்டை கால்டன் மாளி­கை­யு­டனும் தொடர்­பு.

wpengine