ஞானசார தேரரின் மேன்முறையீட்டு இன்று நிராகரித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் தாக்கல் செய்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.


எமது மக்கள் சக்தி என்ற கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடும் நோக்கில் தாக்கல் செய்த வேட்புமனுக்களை நிராகரிக்க தெரிவத்தாட்சி அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானசார தேரர் உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த நான்கு மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எம்.எச்.எம்.டி. நவாஸ், சோஹித ராஜகருண ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.


மனுவை நிராகரித்த நீதியரசர்கள், தேர்தல் சட்டத்தின் 19வது ஷரத்திற்கு அமைய சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் செயற்பட்டுள்ளதாகவும் வேட்புமனுக்கள் கையளித்த போது அவை நிராகரிக்கப்பட்டிருந்தால், வேட்பாளர்களுக்கு எதிர்ப்புகளை முன்வைக்க சந்தர்ப்பம் இருந்ததாகவும் இதனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்க முடியாது எனவும் அவற்றை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares