பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் அடிப்படை மனு விசாரணை இன்று

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனு இன்று விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு , ஞானசார தேரரை கைதுசெய்வதற்கு முயற்சிப்பதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது அடிப்படை உரிமையை மீறும் வகையிலான கைதை தடுத்து நிறுத்தும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஞாசார தேரரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் இரண்டு பிடியாணை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஞானசார தேரரின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை ஏனைய முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்துள்ள பொலிஸாரால் ஏன்  ஞானசார தேரரை கைதுசெய்ய முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ள கூட்டு எதிர்கட்சி, அரசாங்கமே ஞானசார தேரரை மறைத்துவைத்து, நாடகம் ஆடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Related posts

சொகுசு வாகனம் கொள்வனவு செய்த ரவூப் ஹக்கீம்

wpengine

நம்பிக்கை இல்லாப்பிரேரணை! ஹக்கீம்,றிஷாட் நம்மோடு உள்ளார்கள் ரணில் தெரிவிப்பு

wpengine

ஊடகங்களின் கவனத்திற்கு! பொலிஸ் ஊடகம் பிரிவு

wpengine