பிரதான செய்திகள்

ஞானசாரவுக்கு உதவுவது சம்பிக்கவே – திஸ்ஸ

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், மறைந்திருக்க சம்பிக்க ரணவக்க உதவுவதாக, லங்கா சமசமாஜ கட்சியின் பிரதம செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

சில பத்திரிகைகளில் தேரர் மறைந்திருப்பது பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் என செய்திகள் வௌியாகிய போதும், அது யார் என இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதனை தான் வௌிப்படுத்துவதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறியுள்ள அவர், 2014ம் ஆண்டு கொழும்பு மாவட்ட வேட்பாளராக ஞானசார களமிறங்கியது அக் கட்சி சார்பிலேயே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜாதிக ஹெல உறுமயவின் தற்போதைய தலைவரான ஹெதிகல்லே விமலசார தேரர் முதலில் பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

Related posts

சில இனவாதிகள் நம் சமூகத்தின் மீது அபாண்டமான வீண்பழிகளை சுமத்துகின்றார்கள் -றிசாட்

wpengine

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமானது

wpengine

முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அழத்தம்

wpengine