ஜே.வி.பி கட்சித் தலைமையில் மீளவும் மாற்றம்!

ஜே.வி.பி கட்சித் தலைமையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தலைமைத்துவம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் நடவடிக்கைகளுக்கு கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அனுரகுமாரவிற்கு எதிரான தரப்பினர் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர். கட்சித் தலைமையில் உடனடி மாற்றம் செய்யப்பட வேண்டுமென அந்த தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, புதிய தலைமைப் பதவிக்காக தொழிற்சங்கத் தலைவரான கே.டி.லால்காந்த மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்கு உறுப்பினர்கள் தீர்வு காண அவகாசம் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் அவசரமாக அயர்லாந்துக்கு விஜயம் செய்தார் என கட்சி உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைம குறித்து அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் தலவத்துகொட பிரதேச ஹோட்டல் ஒன்றில் வைத்து கட்சியின் சில உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் கட்சியின் அரசியல் சபை இது வரையில் உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares