உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகிர் நாயக்கை கைது செய்ய சிவசேனா வலியுறுத்தல்

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு பங்காளதேஷ் முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மெக்கா நகருக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக் இன்று மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜாகிர் நாயக்கின் பிரச்சாரங்களை ஒளிபரப்பி வரும் அவருக்கு சொந்தமான ‘பீஸ் டி.வி’ சேனலுக்கு வங்காளதேசம் அரசு நேற்று தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி உள்நாட்டில் யாராவது அந்த சேனலை ஒளிபரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஜாகிர் நாயக் மும்பை திரும்பியதும் அவரை கைது செய்ய வேண்டும் என மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் இன்று வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட அசார் மசூத் போன்ற வெறியர்கள் தங்களது பேச்சின் மூலம் வெளிப்படையாக விஷத்தை கக்குவதுபோல், ஜாகிர் நாயக்கை போன்றவர்களும் அமைதிக்கான சமூகச் சேவை என்ற ரகசிய போர்வையில் செயல்பட்டு வருகின்றனர்.

பங்காளதேஷில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் கடந்த பல ஆண்டுகளாக பீஸ் டி.வி.யில் வெளியாகும் தனது சொற்பொழிவுகளின் மூலம் சமூக விரோதிகளை ஊக்குவித்துவரும் ஜாகிர் நாயக்கின் முகமூடி கழன்றுப் போனது.

பிரசாரம் டி.வி. (Preach TV) என்பதுதான் பீஸ் டி.வி.யின் (Peace TV) உண்மை முகமாக உள்ளது. இந்த தொலைக்காட்சி சேனலுக்கு சொந்தமான அனைத்தையும் அழிக்க மோடி தலைமையிலான மத்திய அரசும், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மராட்டிய மாநில அரசும் கொஞ்சம் துணிச்சலுடன் முன்வர வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை வேண்டுமானால் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆனால், ஜாகிர் நாயக்கின் விளையாட்டு இந்த நாட்டை அழித்துவிடும் என்பதால் தற்போதைய நிலையில் அவருக்கு நிதியாதாரமாக விளங்கி வருபவர்களை இந்த அரசு உடனடியாக அழித்தாக வேண்டும். ஜாகிர் நாயக் இந்தியா திரும்பியதும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத கால அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட, கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்.

wpengine

புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது.

wpengine

உழல் பட்டியலில் இலங்கை 91வது இடம்

wpengine