பிரதான செய்திகள்

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தலையீட்டிலேயே தீர்வு வேண்டும்

ஜம்மு காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துச்செய்யப்பட்டமைக்கு பின்னர் எழுந்துள்ள நிலைகுறித்து பாகிஸ்தான் இலங்கைக்கு விளக்கமளித்துள்ளது.


இலங்கையில் உள்ள பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சாஹிட் அஹ்மட் ஹஸ்மட் நேற்று எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து தமது விளக்கத்தை அளித்துள்ளார்.

இது இந்தியாவின் சர்வதேச சட்ட உரிமைமீறல் என்று இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜம்மு காஸ்மீரின் சனத்தொகை பரம்பலை மாற்றும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஜம்மு காஸ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தலையீட்டிலேயே தீர்வு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

Maash

21 ஆவது திருத்த சட்டத்திற்கு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால ஆதரவு

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்

wpengine