உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 23பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவனது கூட்டாளிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன. முழுஅடைப்பின் போது மாநிலத்தில் பல நகரங்களில் பர்கான் வானியின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது.

அனந்தநாக் மாவட்டத்தில் பண்டிபோரா, குவாசிகுந்த், லார்னு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன.

இந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 3-வது நாளாக இன்று இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை முதல் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் ரெயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. சில தனியார் பேருந்துகளும் ஆட்டோக்களும் சில இடங்களில் செல்வதை காண முடிந்தது. ஜம்முவில் இருந்து புறப்பட்டு செல்லும் அமர்நாத் யாத்திரை 3-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டது.

சையது அலி ஷா கிலானி, மிர்வாய் உமர் பரூக், முகம்மது  யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர்கள் உள்ள மீள்குடியேற்ற செயலணியினை நிராகரிக்கும் விக்னேஸ்வரன்.

wpengine

தமிழர்களின் உடன்பாடின்றி முஸ்லிம்களால் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா?

wpengine

ஒரு மில்லியனை எட்டிய கணினிமயமாக்கப்பட்டுள்ள கைரேகைகள்..!

Maash