பிரதான செய்திகள்

ஜமா அத்தே இஸ்லாமிய அமைப்பினூடாக அடிப்படைவாதங்களை பரப்பிவர் கைது

வஹாப் மற்றும் ஜிஹாத் அடிப்படைவாதங்களை நாட்டிற்குள் பரப்பிய குற்றச்சாட்டில் தெமட்டகொடையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை – முருதவெல பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஜமா அத்தே இஸ்லாமி என்ற அமைப்பின் முன்னாள் தலைவராக சந்தேகநபர் செயற்பட்டுள்ளதுடன், மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஜமா அத்தே இஸ்லாமி என்ற அமைப்பினூடாக அடிப்படைவாதங்களை பரப்பும் வகையில் குறித்த நபரால் கடிதங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேகநபர் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Related posts

அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும் சாகர தேரர்

wpengine

பாப்பரசர் புகழுடலுக்கு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.

Maash

பொது மைய்யவாடிக்கான மின்விளக்கு பொறுத்தும் அசாரூதீன்

wpengine