உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பான் மூழ்கடிக்கப்படும்! அமெரிக்கா சாம்பலாக்கப்படும் வட கொரியாவின் வாய்போர்

அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், தானாக எடுத்துக்கொண்ட நாடு மட்டும் அல்ல பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு.
அத்தகைய வலிமை மிக்க அமெரிக்காவை வடகொரியா இன்று அஞ்சவைத்துள்ளது என்று கூறலாம்.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
வடகொரியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையே நிகழும் உறவு முறையை மேற்பார்வையிடும் கொரியா ஆசியா – பசிபிக் சமாதான அமைப்பு, வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைக்கு காரணமான அமெரிக்கா விரைவில் உடைக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தக் குழு வெளியிட்ட அறிக்கை பற்றி வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் எப்போதோ அணுகுண்டால் முழ்கியிருக்கக்கூடும். ஜப்பான் இனி எங்கள் அருகில் இருக்கத் தேவையில்லை.

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா சாம்பாலக்கப்படும். அமெரிக்காவும் அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு துணையிருக்கும் ஜப்பானும் மூழ்கடிக்கப்படும்” என்று கூறியுள்ளது.

ஜப்பான் கடலில் நடுத்தர ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வடகொரியா நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஆணுஆயுத சோதனை நடந்தி வந்தது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டது.

வடகொரியாவை மிரட்டும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் பயிற்சியில் இறங்கினர்.
இதற்கு சற்றும் அஞ்சாத வடகொரியா கடந்த செம்டம்பர் மாதம் 3ஆம் திகதி 6ஆவது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமெரிக்கா ஐ. நா.பாதுகாப்பு சபையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடையை திங்கட்கிழமை கொண்டு வந்து அதனை ஒருமனதாக நிறைவேற்றியது.

Related posts

தமிழ்வின் News,Lankasri இனவாத ஊடகம் “தேன் நிலவு முறிந்தது”

wpengine

உதவி பிரதேச செயலாளர் 7ஆண்களை பாலியல் பலாத்காரம்

wpengine

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine