பிரதான செய்திகள்

ஜப்பான் நாட்டிலும் மஹிந்த ஆசி வேண்டினார்

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சவரா லங்கா ஜி விகாரையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜப்பானிலுள்ள இலங்கையர்களின் அழைப்பினை ஏற்று 6 நாட்கள் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன் தினம் ஜப்பானுக்குச் சென்றனர்.

ஜப்பானின் பிரதான சங்க நாயக்கர் பானகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ஸ, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ஜானக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, ரோஷான் ரணசிங்க, தெஹிவளை – கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட குழுவினர் முன்னாள் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர்

wpengine

மின்சார சபையில் 25000 ற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்ற நிலையில், 50% பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு .!

Maash

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதி

wpengine