பிரதான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டம் வவுனியாவில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிராம சக்தி தொடர்பான செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை வவுனியா உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபாலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வறுமையை ஒழித்தல் பாரிய இலக்கை அடையும் முகமாக கிராம சக்தி வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி மக்களின் பொருளாதார விருத்திக்கான பல்வேறு உதவித்திட்டங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் செயலமர்வில் குறித்த வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் கிராம அலுவலகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட தலைவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

Related posts

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிப்பு

wpengine

மன்னார் மடு வருடாந்த ஆவனித் திருவிழா! 150 பேர் மட்டும்

wpengine

இனவாதம் பேசும் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine