பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் கரங்களிலிருந்து விருதினை பெற்றுக்கொள்ள முடியாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களிலிருந்து விருதினை பெற்றுக்கொள்ள முடியாது என பிரபல நடிகரான டபிள்யூ. ஜயசிறி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரியின் கரங்களில் விருது பெற்றுக்கொள்ள விரும்பவில்லலை எனவும், இதனால் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான கலாபூசண விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கலாச்சார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு தாமரை தாடகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி பங்கேற்பதனால் இந்த நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என ஜயசிறி முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Related posts

நானாட்டான் பிரதேச சபையின் முடிவுகள் தன்னிச்சையான முறையில் நடைபெறுகின்றன.

wpengine

கேப்பாபுலவு மக்களை ஏமாற்றும் தமிழ் கூட்டமைப்பு! மக்கள் விசனம்

wpengine

வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார் ஞான­சாரர்

wpengine