பிரதான செய்திகள்

ஜனாதிபதியினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷமான செய்தி

சமுர்த்தி கொடுப்பனவுகளை நிறுத்துவதோ குறைப்பதோ ஒருபோதும் இடம்பெறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

எம்பிலிப்பிட்டிய கம்உதாவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி குறிப்பிட்டதாவது,

இந்த நாட்டின் சுமார் 15 இலட்சம் மக்கள் சமுர்த்தி ஊடாக பயனடைகின்றனர். சமுர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாட்டில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையை நான் அவதானித்தேன். எனினும், சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிறுத்தவோ, குறைக்கவோ போவதில்லை என்பதை நான் தௌிவாகக் கூற விரும்புகின்றேன். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, தொடர்ந்தும் ஒதுக்கப்படும். தற்போது சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாத ஒரு இலட்சம் குடும்பங்கள் உள்ளன. அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிதாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor

ஐ.எஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் கைக்கூலிகலா ? அவர்களது எதிர்கால திட்டம் எவ்வாறு இருந்தது ? நிதி எங்கிருந்து வந்தது ?

wpengine