பிரதான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து வெளியிடும் போது,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வது சம்பந்தமாகவுமே இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

தேர்தலில் தான் போட்டியிடவுள்ளார் என்பதை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எனவே, அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என நாம் உறுதியளித்தோம்.

சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவரே பிரதமர் ரணில். தீர்வுத் திட்டமும் அவரிடம் உள்ளது.

எனவே, ஏனைய இடதுசாரிகளின் ஆதரவையும் பெறுவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Editor

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

wpengine

ஹலோ ஜனாதிபதியிடம் சொல்லுங்க – இது வரைக்கும் பொதுமக்கள் பிரச்சினைகள் 44,677

wpengine