பிரதான செய்திகள்

ஜனவரியில் தேர்தல் நடாத்த வாய்ப்பு! ஐ.தே.க.தயார்

அடுத்த அண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சி எந்த ஒரு தேர்தலுக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் பல கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
மேலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே இந்த முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுக்கள் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காதலர் தினத்தை முன்னிட்டு சிக்கலை சந்திக்கும் பெண்களுக்கு , 109 தொலைபேசி எண்.

Maash

வாகன விபத்து! பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப்பின் மகள்,மகன் வைத்தியசாலையில்

wpengine

அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹிருணிகா

wpengine