பிரதான செய்திகள்

சொகுசு வாகனங்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – பாலித தெவரப்பெரும

பயன்படுத்தாது துருப்பிடிக்கும் நிலையில் காணப்படுகின்ற குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் பயன்படுத்த முடியுமான அரச வாகனங்கள் இருந்தும் புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்குவது தேவையற்றது என கலாச்சார அலுவல்கள் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.

கோடிக் கணக்கில் செலவு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை கொண்டு வருவதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதி அமைச்சர் என்ற வகையில் தனக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைக் கூட தான் மறுத்துள்ளதாகவும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் தமக்கு சொகுசு வாகனங்கள் தேவையில்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடம்பெறவில்லை

wpengine

மன்னார்-கட்டுக்கரையில் சடலம்

wpengine

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

wpengine