செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் பேசிய வாலிபர் ஒருவர், தவறி விழுந்து பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் வினோபா காலனியில் வசித்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகன் விவேகானந்தன். 19 வயதான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் 2வது மாடியில் இருந்து செல்போனில் பேசியுள்ளார். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை வீட்டில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை.  அடுத்தநாள் காலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், விவேகானந்தன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அப்போது, விவேகானந்தன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares