பிரதான செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களை பார்வையிட்ட நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அறியவுமே அவர் அங்கு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நாமல் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பஷீரின் எச்சரிக்கை ஹக்கீமுக்கு

wpengine

கொழும்பு – சிலாபம் பஸ் விபத்தில் 10 பேர் காயம்!

Editor

விக்கியின் விசாரணை குழுவில் மோசடி,சிறைவாசம்

wpengine