பிரதான செய்திகள்

செப்டெம்பர் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்! 95% பணி நிறைவு

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக ஆளும் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளதாகவும் தேர்தலுக்கான அடிப்படையான பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அடுத்த பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும் எனவும் அந்த சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் இறுதிக்குள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவப்பு அறிக்கை வௌியிட்டிருந்த 3 குற்றவாளிகள் துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தல்.

Maash

மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி நிகழ்ச்சி

wpengine

வடமேற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!

Editor