பிரதான செய்திகள்

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நீக்கப்பட்டுள்ளனர்.

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், பெந்தர – எல்பிட்டிய தேர்தல் தொகுதியின்  அமைப்பாளராகவிருந்த கீதா குமாரசிங்க, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, முன்னாள் பிரதேச சபைத் தலைவர் கயான் சிறிமன்ன பெந்தர தொகுதியின் அமைப்பாளராகவும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் வைரலாகும் மைத்திரி

wpengine

கிணற்றுக்குள் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு.! யாழில் சோகம்.

Maash

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine