சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிடுகின்றேன் ராஜித

இலங்கையின் அடுத்த பிரதமர், தான் என நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கூறியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


சிறையில் இருக்கும் போது தன்னை அரசனை போல் கவனித்து கொண்டனர் எனவும், கைதிகள் கௌரவமாக அன்புடன் கவனித்து கொண்டதாகவும் தனது தேவைகளை நிறைவேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.


கைதிகள் தான் குளிப்பதற்கு தண்ணீரை சுடவைத்து கொடுத்ததாகவும், வாழ்க்கையில் மிகவும் சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிட்டதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவுடன் பணியாற்றுவதற்கு பதிலாக தன்னுடன் இலகுவாக பணியாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares