கட்டுரைகள்பிரதான செய்திகள்

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனும், அவரது குடும்பமும் இன்று கடினமான சூழ்நிலைக்குட்பட்டு இருப்பது ஓர் மனிதனாக கவலையளிக்கின்றது. நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக 120 நாட்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் றிஸாத்தின் கைதானது வெறுமனே பேராயரையும் சில சிங்கள – கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்தும் வகையிலையே இடம்பெற்றுள்ளது என்பது கடந்த காலங்களில் நடைபெற்ற நீதியில்லா நீதி மூலமும், அவர்களின் நடவடிக்கைகள் மூலமும் தெட்டத் தெளிவாக புலப்படுகின்றன என இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

இந்த அநீதிகளையெல்லாம் கடந்து செல்ல மனம் கசப்பாக இருந்தாலும் தொடந்தும் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் விதமாக சகோதரி ஹிசாலியின் மரணத்தோடு மக்கள் காங்கிரஸ் தலைவரும், அவரின் குடும்பமும் பொறிக்குள் மாட்டிக் கொண்டது. 18 வயதுக்கு கீழ்பட்டவரை வேலைக்கு செல்ல அனுமதித்த சகோதரி ஹிசாலியின் பெற்றோர்கள் கைது இதுவரை செய்யப்படவில்லை என்பதுடன் ஹிசாலினி காதலித்த நபரின் பெயரோ, அவருக்கான விசாரணையோ நடைபெறவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அந்த சகோதரி வேலைக்கு அமர்த்தப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணை இல்லை. இதனை தவிர்த்து சகோதரியின் இனக்கப்பெருக்கத் தொகுதியில் உள்ள யோனி வழி பல முறை பயன்படுத்தப்பட்டு தேய்ந்திருப்பதாக சொல்லப்படும் மருத்துவ அறிக்கையினைத் தொடர்ந்து DNA முடிவுகள் இல்லையா? இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுத்தீன் பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார். தனது மகள் காயப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் இருந்த போது மக்கள் தலைவர் றிஸாத்தின் மனைவி வழங்கிய பணம் குறித்து அத் தாயிடம் வினவவில்லையா?

தனது மகள் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தார் என அத்தாய் சொல்லும் போது , ஏன் குறித்த விடயம் அறிந்திருந்தும் பொலிஸில் முறையிடவில்லை என இது தொடர்பில் கேள்விகளைஅடுக்கிக் கொண்டே செல்ல முடியும். இவற்றையெல்லாம் தாண்டி மலையக அரசியல்வாதிகளின் வங்குரோத்து தரமான அரசியல் நடவடிக்கைகள் மிகவும் கேவலமாக உள்ளது. சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

நாட்டு நிலைமைகளை மறைக்க உண்மைகளை மறைத்து, திரிவுகளை மேற்கொண்டு தலைவரை குற்றாவளியாகவே சில இனவாத ஊடங்கள் காண்பிக்கின்றது. நடுநிலை பேண வேண்டியவர்களே ஒரு தலையாக நடக்கின்றனர். ஊடக தர்மம் அழிந்து போயுள்ளது. இதில் சில ஊடகங்கள் ஊடக தர்மத்தை காத்து நீதியான செய்திகளை முன்கொண்டுவருவது ஆறுதலளிக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி றிசாத் எம்.பி, எம்.பியின் மனைவி, மாமனார் என்போரை விசாரணை என்ற பெயரில் சிறையில் வைத்திருப்பது எவ்வகையில் நியாயம். றிஸாத்தின் மைத்துனர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்று போலிக் குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றத்தால் குறிப்பிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். றிஸாத்தின் மனைவி பிள்ளை பாசமிகுந்தவர், இறை பக்தி உடையவர். அவ்வாற ஒரு பெண் மீது வீண் பலி சுமத்தி குற்றவாளியாக சமூகத்திற்கு வெளிக்காட்டுவது பெண் உரிமை மீறலே. நிச்சயம் சுத்தவாளி என அவர் மீண்டு வரும் போது காவல்துறை, நீதித்துறை தலைகுனியும் நிச்சயமாக.

அரசாங்கம் பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் தலைவரை அநீதியாக சிறைவாசம் வைத்திருப்பது நியாயமில்லை. எனவே உரிய விசாரணைகளை மேற்கொண்டு ஜனநாயக ரீதியாக தெரிவான மக்கள் தலைவருக்கு நீதி வழங்குங்கள் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இளைஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதுடன் பொதுமக்களும் தற்போதுள்ள சூழ்நிலையில் இறைவனிடம் கையேந்தி எமது பிரதிநிதியான அந்த தலைவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் பிராத்தனைகளை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

2000 கிராம சேவையாளர்கள் பதவி வெற்றிடம்

wpengine

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்.

wpengine

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

wpengine