பிரதான செய்திகள்

சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதம்

திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையானது சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
சுத்தமான குழாய் நீர் பெறுவதற்காக விண்ணப்பித்து பல மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை நீர் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தொடரபில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்! றிஷாட்,விக்கி பங்கேற்பு

wpengine

மே 23 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

wpengine

மைத்திரியின் 2018 இன் அமெரிக்க பயணத்துக்கு 50.4 மில்லியன் செலவு .

Maash