செய்திகள்பிரதான செய்திகள்

சுதுவெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு 12 வயது சிறுமி உட்பட 3 பேர் வைத்தியசலையில்..!

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இனந்தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் (30), மகள் (12), மற்றொருவர் (44) காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இது வரை தெரியவரவில்லையென்றும், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் கைதுசெய்யப்படவில்லையென்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி முனைகிறார்.

wpengine

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடாத்தான முறையில் பயிர் செய்கை

wpengine

முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்

wpengine