கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டம்.

இலங்கையின் (Srilanka) சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் கிளிநொச்சியில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டடமானது இன்று (4.2.2025) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி (Klinochchi) கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam), சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் (Selvaraja Gajendran), காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் (Rathanasingam Muralitharan) உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அத்தோடு, எங்கே எமது உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்., எமது நிலம் எமக்கு வேண்டும் மற்றும் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு என பாரிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றது.

பின்வரும் விடயங்களை கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.
தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்
தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்
சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
எமது நிலம் எமக்கு வேண்டும்.
தாயகம், தேசியம், அரசியல் சுயநிரணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.
எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.

Related posts

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

wpengine

ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்! கைது சட்டபூர்வமானது.

wpengine

வவுனியாவில் நாளை கடையடைப்பு இல்லை இராஜலிங்கம்

wpengine