சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவையில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிகரமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டுள்ளது.


எதிர்காலத்தில் இந்த கட்சியை மேலும் வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது அதன் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் நோக்கம்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கீழ் மட்டத்தில் வெற்றிகரமான கட்டமைப்பை கொண்டுள்ள பிரதான அரசியல் கட்சி எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares