சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து மேலும் சிலர் நீக்கப்படவுள்ளனர் -அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பையும் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி, கட்சியை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்களை கட்சியில் இருந்தும் பதவிகளில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்வர்களை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருப்பது தொடர்பாக கட்சியினர் மத்தியிலேயே எதிர்ப்பு வெளிவர ஆரம்பித்துள்ளன.

இதனால், கட்சியில் பதவிகளை வகித்து கொண்டு ஊடகங்களுக்கு எதிரில் கண்காட்சி நடத்தி, கட்சியினரை தவறாக வழிடத்தும் தொகுதி அமைப்பளர்கள், மாவட்ட தலைவர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளில் பதவிகளை வகிப்போரை விரும்பமின்றியேனும் நீக்க நேரிடும்.

கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, சுதந்திரமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு வழங்கிய சுதந்திரத்தை சிறிய தரப்பினர் தவறாக பயன்படுத்தி கட்சியை பிளவுப்படுத்த சதித்திட்டம் போட்டு வருகின்றனர்.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

சகல சதித்திட்டங்களையும் நாங்கள் தோற்கடிப்போம். கட்சியை உயிரை கொடுத்தேனும் பாதுகாப்போம் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares