பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சிக்கு ஏழு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்! இரண்டு முஸ்லிம்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட ஏழு மாவட்ட அமைப்பாளர்களுக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இதற்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திற்கான ஆசன அமைப்பாளராக சுமுது விஜேரத்னவும், குருநாகல் மாவட்டத்திற்காக ஆர்.எம்.சனத் பத்மசிறி மற்றும் ஏ.ஏ.ஏ.லதீப் ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்திற்காக கே.பி.பிரியந்த பிரேமகுமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பதுளை மாவட்டத்திற்கு ரசித தேசப்பிரிய ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எம்.எஸ்.சபைர் மற்றும் யாழ் மாவட்டத்திற்கு எஸ்.கஜந்தன் ஆகியோரு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் பல நாடுகள்

wpengine

”காணி உறுதிகளோ! அல்லது வேறு எந்த மோசடிகளோ! விமலுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்

wpengine

வன்னி,யாழ் ஆகிய மாவட்டங்களில் தனித்துப்போட்டி

wpengine