(எம்.ரீ. ஹைதர் அலி)
கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் வாகரை வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட 18 பாடசாலைகளுக்குள் நடாத்தப்பட்ட சுகாதார கழக போட்டியில் ஆலங்குளம் மட்/ககு/அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது. இப்போட்டியானது 2016.09.21ஆந்திகதி வாகரை மட்/ககு/மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம் மட்/ககு/அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலாமிடம் பெற்றமைக்காக இப்பாடசாலையின் அதிபர் ரவிச்சந்திரன், பாடசாலை சுகாதார கழகத்திற்கு பொறுப்பான ஆசிரியர் ஜெயநாதன் மற்றும் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலை முதலாமிடம் வருவதற்காக காரணமாக அமைந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது தேவைப்பாடுகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமையில் காணப்பட்ட மலசல கூடத்திற்கு தனது தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்து நீர் வசதியினை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் பெற்றுக்கொடுத்தமையாகும். இதனாலேயே எமது பாடசாலை முதலிடம் பெற்றதாக பாடசாலை அதிபர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இப்போட்டியில் முதலாமிடம் வருவதற்காக இப்பாடசாலையின் மலசலகூடத்திற்கு நீர் வசதியினை பெற்றுத்தந்தமைக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு என்பன மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கமைவாக இப்பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி, நீர் இறைக்கும் பம் (மோட்டர்), நீர் வினியோகத்தை பெறுவதற்கான குழாய் வசதி மற்றும் பாடசாலை அதிபரின் காரியாலயத்திற்கான மின்விசிறி என்பனவற்றை 40,000 ரூபா செலவில் தனது தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்து கடந்த 2016.07.18ஆந்திகதி இப்பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
