பிரதான செய்திகள்

சீனி இன்றி சுவைப்போம்! முசலி சுகாதார வைத்திய நிலையத்தில் கண்காட்சி

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு ‘சீனி இன்றி சுவைப்போம்’ எனும் கருப் பொருளில் கண்காட்சி நிகழ்வானது மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த கண்காட்சியை முசலி பிரதேச செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் , பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள் , பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வீதியில், இறங்கி மக்களை அழைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தால் வானத்தில் இருந்து டொலர் கொட்டாது.

wpengine

வெள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்து உடனுக்குடன் உதவினார் அமைச்சர் றிசாத்!

wpengine

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்

wpengine