பிரதான செய்திகள்

சிவகரன் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை; வெளிநாடு செல்லவும் தடை

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் இவர் இன்று வியாழக்கிழமை பகல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு இதன்போது நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத்தடை விதிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டார்.

அவசர தேவைகளுக்காக வெளிநாடு செல்வதாயின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் நீதவான் விதித்துள்ளார்.

அதேபோன்று, ஒவ்வொறு மாதத்திலும் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தற்கு வந்து கையெழுத்து இடுமாறும் சிவகரனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு மீதான அடுத்த விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் சிவகரன் நேற்று புதன்கிழமை மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

WhatsApp ஆல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

wpengine

நெல் கொள்வனவு தாமதம்! மட்டக்களப்பு விவசாயிகள் விசனம்

wpengine

அத்தியாவசி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது சதொச நிறுவனம்!

Editor