பிரதான செய்திகள்

சில இடங்களில் தனித்தும்,கூட்டாகவும் றிஷாட் இணைந்து போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சில மாவட்டங்களில் சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் நடைைபெற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,


எதிர்வரும் தேர்தலில் எமது கட்சியை பொறுத்த வரை சில மாவட்டங்களில் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடும் நிலை இருக்கிறது.


இது தொடர்பாக அனைத்து கூட்டு கட்சிகளுடனும் கலந்துரையாடி எமது கட்சிக்கும் பாதிப்பில்லாமல்.

மற்றவர்களுக்கும் பாதிப்பில்லாமல் சரியான ஒரு முடிவினை தேர்தலின் முன்னர் எமது கட்சி எடுக்கும்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய கூட்டணி ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. அதில் பல கட்சிகள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு பலமான ஒரு கூட்டு அமைப்பு உருவாக்குவதற்கான திட்டம் தீட்டப்படுகின்றது.


அந்த கூட்டமைப்புடன் இணைந்து சில மாவட்டங்களில் போட்டியிடுவோம். சில மாவட்டங்களில் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறோம். இந்த விடயங்களை எமது கட்சியின் உயர்பீடம் கூடி முடிவினை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன: மாநாயக்க தேரர்

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor

பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள்

wpengine