பிரதான செய்திகள்

சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத உயர் அதிகாரிகள்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்துறையில் இருந்து இலவங்குளம் செல்லும் பிரதான விதியில் முசலி பிரதேச சபை கட்டடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பெற்றுள்ள முசலி பிரதேசத்திற்கான கடற்தொழில் பரிசோதர் அலுவலகம் இதுவரைக்கும் திறக்கப்படாமலும்,பராமரிப்பு அற்ற நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் தெரிவிக்கையில்

இந்த அலுவலகம் அமைக்கப்பெற்று சுமார் 5வருடங்கள் சென்றும் இதுவரைக்கும் திறக்கப்படவில்லை என்றும்,இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பெற்றுள்ள அதிகாரிகள் இதுவரைக்கும் வருகைதரவில்லை எனவும்,இதனால் பிரதேச கடற்தொழில் தொழிலாளர்கள் தங்களுடைய தொழில் தொடர்பான நடைமுறை விடயங்களை செய்து கொள்வதில் பல்வேறு கஷ்டங்களையும்,சிறமங்களையும் எதிர்நோக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் அதிகமான கடற்தொழிலாளர் உள்ள போதும் ஏன் இந்த அலுவலகம் திறக்கப்படவில்லை என்ற காரணம் அறியப்படவில்லை எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் பல லச்சம் ரூபா பெறுமதியான பணங்களை செலவு செய்தும் அப்பாவி தொழிலாளர்களுக்கு பிரயோசனம் கிடைக்கவில்லை எனவும் கூறினார்கள்.

இதனை திறந்து வைக்க மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட கடற்தொழில் அலுவலகம்,முசலி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

Related posts

ஐ.நா.வின் அறிக்கையாளரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

எமது நல்ல பண்பாடுகளின் மூலமாவே எமக்கெதிரான எதிர்புக்களை வென்றெடுக்க முடியும்-ஷிப்லி பாறுக்

wpengine

கல்முனையில் இனவாதம் இயலாமையால் வென்றதா..??

wpengine