பிரதான செய்திகள்

சிலாவத்துறை மற்றும் சிறுக்குளம் குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்த றிப்ஹான் பதியுதீன்

(A.R.A.Raheem)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்   ரிஷாட் பதியுதீன் அவர்களின்  வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள  சிலாவத்துறை மற்றும் சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அமைச்சரின் இணைப்புச்செயலாளரான  முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம விருந்தினராக  கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னால்  முசலி பிரதேச சபையின் உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கிராம மக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள். 
அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னராக  சிறுக்குளம் பள்ளி நிருவாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடனான கிராமத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது. 

Related posts

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

wpengine

ஐ.பி.எல் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!

wpengine

கல்பிட்டி-எத்தாலை முஸ்பர் மசூத் இளைளுனை காணவில்லை

wpengine