பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிலாவத்துறை சிறுவர் பூங்காவின் அவலநிலை! கவனம் செலுத்தாத அரசியவாதிகள்

மன்னார் மாவட்டத்தில்,முசலி பிரதேச சபைக்குவுட்பட்ட சிலாவத்துறை,கிராமத்தில் காணப்படும் சிறுவர் பூங்கா பல வருடகாலமாக பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த பூங்கா பராமரிப்பற்ற நிலையிலும்,காடுகளாகவும் காணப்படுகின்ற வேளையில் இது தொடர்பில் யாரும் கரிசனை கொள்ளவில்லை எனவும் அறியமுடிகின்றன.

சிறுவர்கள் இதில் விளையாட முடியாதவாறு பல உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன் பற்றை காடுகளாக காணப்படுவதன் காரணமாக பாம்புகள்,இன்னும் விசம் கொண்ட ஊர்வனங்கள் சிறுவர்களையும்,ஏனையயோர்களையும் தாக்க கூடிய நிலையில் பூங்கா காணப்படுகின்றன.

முசலி பிரதேச சபையின் ஊடாக  பிரதேசத்தில் அமைக்கப்பெற்ற பல சிறுவர் பூங்கா இந்த நிலையில் இன்னும் காணப்படுவதாக பலர் கண்டம் தெரிவித்துள்ளார்கள்.
பாலர் பாடசாலைக்கான அபிவிருத்தி குழுவினர்கள் இது தொடர்பில் கரிசனை எடுக்கவில்லை எனவும் அறியமுடிகின்றன.

இது தொடர்பில் முசலி பிரதேச சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் கரிசனை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் வேண்டுகோள்  விடுக்கின்றார்கள்.

Related posts

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

Editor

தம்புள்ளை சுற்றுலாத்துறை பிரதிநிதிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Editor

31 Counties Diplomat visited Polannurava Remote areas

wpengine